கொரோனாவுக்கு 3 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 348 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம், மே
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 348 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகினர்.
380 பேர் வீடு திரும்பினர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் இது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 57 ஆக உயர்ந்தது.
இதனிடையே நேற்று சிகிச்சை முடிந்து 380 பேர் வீடு திரும்பினர்.
இவர்களையும் சேர்த்து 11 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 121 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
3 பேர் பலி
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவர், 75 வயது மூதாட்டி, 53 வயது பெண் என 3 பேர் நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்களையும் சேர்த்து 193 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story