வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 25 May 2021 10:49 PM IST (Updated: 25 May 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி விசாகத்தையொட்டி, தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி:
வைகாசி விசாகத்தையொட்டி, தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வைகாசி விசாகம்
தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள், சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 
தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் வைகாசி விசாக சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 
பின்னர் சாமி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். சாமிக்கு மகா தீபாராதனை மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
அன்னசாகரம்
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்ரமணிய சாமி கோவில், எஸ்.வி.ரோடு சுப்ரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், பாரதிபுரம் சுப்ரமணியசாமி கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 
இதேபோல் லலிகம், இண்டூர், பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர், பாலக்கோடு, தீர்த்தமலை, அரூர், இருளப்பட்டி, காரிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Next Story