புவனகிரி அருகே பரபரப்பு பள்ளிக்கூட சமையலறையில் பிணமாக தொங்கிய வாலிபர் போலீஸ் விசாரணை


புவனகிரி அருகே பரபரப்பு பள்ளிக்கூட சமையலறையில் பிணமாக தொங்கிய வாலிபர் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 May 2021 11:06 PM IST (Updated: 25 May 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே பள்ளிக்கூட சமையலறையில் வாலிபர் பிணமாக தொங்கினாா்.

புவனகிரி, 

புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் குணசங்கு. இவரது மகன் யோகநாதன் (வயது 20).  இவர் ஐ.டி.ஐ. படித்தவர் ஆவார்.  நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற யோகநாதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று கீரப்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை வளாகத்தில் யோகநாதன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து,  புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை  மேற்கொண்டனர். இதற்கிடையே யோகநாதனின் பெற்றோர் அங்கு வந்து, பிணமாக கிடந்த தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். 
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story