கொரோனா வார்டில் இருந்து பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ


கொரோனா வார்டில் இருந்து பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ
x
தினத்தந்தி 25 May 2021 11:08 PM IST (Updated: 25 May 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருந்து பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ராமநாதபுரம்,மே.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து, பெண் நோயாளி ஒருவர் கதறி அழுதபடி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய அந்த பெண் கூறியதாவது:-
நான் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். 2 நாட்கள் ஆகிறது. டாக்டர்கள் இதுவரை வந்து பார்க்கவில்லை. எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. நெஞ்சுவலி அதிகமாகிக் கொண்டே போகிறது. நான் வாழ்வேனா, வாழமாட்டேனா, வீடு திரும்புவேனா என்று தெரியவில்லை. நெஞ்சு வலிக்கிறது என்று கூறியும் இதுவரை ஒரு ஊசி கூட போடவில்லை. நான் செத்துவிடுவேன் போலிருக்கிறது. 
இவ்வாறு அந்த பெண் வீடிேயாவில் பேசி உள்ளார்.
இந்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும் என பலரும் வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

Next Story