தபால் நிலையங்களில் 28-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை


தபால் நிலையங்களில் 28-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை
x
தினத்தந்தி 25 May 2021 11:21 PM IST (Updated: 25 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் 28-ந்தேதி வரை தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.

சிவகங்கை,

சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மூலமாக தங்க பத்திர திட்டத்தை வெளியிடுகிறது. அதன் அடிப்படையில் தங்க பத்திர விற்பனை சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் நாளை மறுநாள் (28-ந்தேதி) வரை நடைபெறுகிறது. ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்க பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.4,842 என்று நிர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் முதலீட்டு தொகைக்கு ஆண்டு வட்டியாக 2.5 சதவீதம் கணக்கிட்டு 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story