பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
சோகத்தூர் கிராமத்தில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
வந்தவாசி
சோகத்தூர் கிராமத்தில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
7-ம் வகுப்பு மாணவன்
சென்னை மாங்காட்டை சேர்ந்தவர் முனியப்பராஜ். இவரது மகன் சரண்ராஜ். இவன், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன், தனது பாட்டி வீடான திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்துக்கு வந்துள்ளான்.
பின்னா் அங்கிருந்து சோகத்தூர் கிராமத்தில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு தனது தாய் தீபாவுடன் சென்றுள்ளான்.
இந்த நிலையில் தீபாவுடன் துணி துவைக்க கிணற்றுக்கு சென்றுள்ளான். பின்னர் குளிப்பதற்காக சரண்ராஜ் கிணற்றில் இறங்கியுள்ளான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிணமாக மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தீயணைப்பு அலுவலர் குப்புராஜ் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி சரண்ராஜ்யை பிணமாக மீட்டனர்.
அதைத் தொடர்ந்து தெள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story