கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி-ஒரே நாளில் 788 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 788 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 788 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கடந்த 8-ந் தேதி சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
அதே போல 45 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 23-ந் தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
788 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,620 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்து 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 21 ஆயிரத்து 945 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 7 ஆயிரத்து 543 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story