போச்சம்பள்ளி அருகே, போலீஸ் உடையில் வந்து பூசாரியை கடத்தி பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது


போச்சம்பள்ளி அருகே, போலீஸ் உடையில் வந்து  பூசாரியை கடத்தி பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 25 May 2021 11:27 PM IST (Updated: 25 May 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே போலீஸ் உடையில் வந்து பூசாரியை கடத்தி பணம் பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி அருகே போலீஸ் உடையில் வந்து பூசாரியை கடத்தி பணம் பறித்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பூசாரியை கடத்தி பணம் பறிப்பு
போச்சம்பள்ளி அருகே உள்ள குடிமேனஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51). இவர் அந்த பகுதியில் காளிகோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று 4 பேர் பெருமாளின் வீட்டிற்கு காரில் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் உடை அணிந்திருந்தார். மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். 
அப்போது அவர்கள் பெருமாளிடம் உன் மீது புகார் ஒன்று வந்துள்ளது. புகாரின் பேரில் விசாரிக்க வேண்டும் என்று அவர்கள் வந்த காரில் அவரை கடத்தி சென்றுள்ளனர். 
அப்போது அவரிடம் உன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும் என அவர்கள் மிரட்டி உள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டி பெற்றுக்கொண்டு காரில் இருந்து அவரை இறக்கி விட்டு விட்டு சென்றனர். 
கைது
இந்த நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெருமாள், இது குறித்து பாரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் விசாரணை நடத்தினார். இதில் சவுட்டஅள்ளி அருகே உள்ள பள்ளிபட்டியை சேர்ந்த ஆறுமுகம் (45) உள்பட மேலும் சிலர் சேர்ந்து பூசாரியை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், மற்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story