ஊரடங்கு காரணமாக காய்கறி வியாபாரம் செய்யும் ஆட்டோ டிரைவர்


ஊரடங்கு காரணமாக காய்கறி வியாபாரம் செய்யும் ஆட்டோ டிரைவர்
x
தினத்தந்தி 25 May 2021 11:35 PM IST (Updated: 25 May 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காரணமாக காய்கறி வியாபாரம் செய்யும் ஆட்டோ டிரைவர்

பொள்ளாச்சி

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் மூடப்பட்டு உள்ளதுடன் பொதுப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தற்போது வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் என்பவர் ஆட்டோவில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். 

இதனால் வேறு வழி இல்லாமல் நகராட்சி மூலம் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரும்பாலும் காய்கறிகள் வாங்குவதில்லை. 

இதனால் விற்பனை குறைந்ததால் போதிய வருமானம் இல்லை. ஆட்டோ ஓடவில்லை என்று தான் காய்கறி வியாபாரத்திற்கு வந்தேன். ஆனால் அதிலும் வருமானம் இல்லாததால் சிரமமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story