வாணியம்பாடி பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


வாணியம்பாடி பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x

வாணியம்பாடி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் திடீரென ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர், புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனை மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று கேட்டறிந்து அனுப்பி வைத்தார். தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பினார். 

அப்போது புதூர் போலீஸ் சோதனை மையத்தின் வழியாக வந்த அரசு பஸ்சையும் நிறுத்தி விசாரித்தார். 
தொடர்ந்து பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சென்று முழு ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் போலீஸ் சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் தேவையின்றி வாகனத்தில் வெளியே சுற்றுவதை தவிர்த்து வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர்.

மேலும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் முழு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story