ஒரே நாளில் 244 வாகனங்களில் 94 டன் காய்கறிகள் விற்பனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 244 வாகனங்களில் 94 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
திருப்பத்தூர்
கொரானா பரவலை கட்டுப்படுத்திட தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மளிகை பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று மட்டும் மாவட்டத்தில் 244 வாகனங்களில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் அனைத்துப் பகுதிகளிலும் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் வினியோகம் செய்யப்பட்டது.
சுமார் 94 டன் காய்கறிகள் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ 17 லட்சம் ஆகும் என அதிகாரிகள் கூறினர்.
திருப்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் பல இடங்களுக்கு காய்கறி வாகனங்கள் செல்லவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே அனைத்து பகுதிகளிலும் முறையாக பொதுமக்களுக்கு காய்கறிகள் சென்றடைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story