அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மேற்கு வங்காளம் விரைவு
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மேற்கு வளகாளத்திற்கு சென்றனர்.
அரக்கோணம்
வங்காள விரிகுடாவில் உருவான யாஸ் புயல் ஓடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனையடுத்து மேற்கு வங்க மாநிலத்திற்கு முனனெச்சரிக்கை மற்றும் புயல் மழை வெள்ள சேத மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து 125 வீரர்கள் நேற்று விரைந்து சென்றனர்.
கூடுதல் கமாண்டன்ட் ராஜன் பாலு தலைமையில் தலா 25 வீரர்கள் அடங்கிய 5 குழுக்களாக இவர்கள் விமானப்படை 2 விமானத்தில் அதி நவீன மீட்பு உபகரணங்களுடன் மேற்கு வங்க மாநிலம் கோரக்பூருக்கு சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story