ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கையொட்டி ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான திமிரியை அடுத்த தாமரைபாக்கத்திலமு் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனைச் சாவடி அமைத்து பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்தனர்.
நேற்று நடத்திய சோதனையில் இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதனை திமிரி போலீசார் மற்றும் ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story