சிங்கம்புணரியில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி


சிங்கம்புணரியில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 May 2021 11:56 PM IST (Updated: 25 May 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கிவைத்தார்.

சிங்கம்புணரி.

சிங்கம்புணரியில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கிவைத்தார்.

தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்ட துணை இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் பேரில் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி.  முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் காரைக்குடி மாங்குடி எம்.எல்.ஏ., சுகாதாரப்பணி துணை இயக்குனர் யசோதா மணி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, தாசில்தார் திருநாவுக்கரசு, செயல் அலுவலர் ஜான்முகமது, வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், அரசு மருத்துவமனை டாக்டர்கள் செந்தில்வேலன், செந்தில் டாக்டர்கள் ராஜ்குமார், பிரேம், மற்றும் ஆர்.எம்.எஸ். மருத்துவமனையின் பொது மருத்துவர் அருள்மணி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

204 பேருக்கு கொரோனா தடுப்பூசி

 இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 204 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து வேளாண் வணிகத்துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சி சார்பாக நடமாடும் காய்கறி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
முன்னதாக வேளாண் வணிகத் துறை சார்பாக 3 நடமாடும் வாகனமும், பேரூராட்சி சார்பாக 21 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மற்றும் 13 தள்ளு வண்டி ஆகியவற்றை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், வேளாண் வணிக துணை இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story