முழு ஊரடங்கால் கால்நடைகளுக்கு உணவாகி வரும் வாழை-பலாப்பழங்கள்


முழு ஊரடங்கால்  கால்நடைகளுக்கு உணவாகி வரும் வாழை-பலாப்பழங்கள்
x
தினத்தந்தி 25 May 2021 11:58 PM IST (Updated: 25 May 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

வாழை-பலாப்பழங்கள் கால்நடைகளுக்கு உணவாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வடகாடு:
வடகாடு, மாங்காடு மற்றும் இதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வாழைத்தோட்டம் மற்றும் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் மற்றும் பலாப்பழங்கள் வெளிமாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கு கூட ஏற்றுமதி ஆகி வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாத வாழைப்பழங்கள் மற்றும் பலாப்பழங்கள் மரங்களிலேயே பழுத்து பறவைகளுக்கு உணவாகி வந்தது. தற்போது கொரோனா 2-வது தொற்று அலையால் இந்த ஆண்டும் பலாப்பழங்கள் மற்றும் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் கால்நடைகளுக்கு உணவாகி வருவது வேதனையளிக்கிறது என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஏற்கனவே இயற்கை பேரிடர் போன்றவற்றில் பாதிக்கப்பட்டு மீண்டும் வரும் நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் சிக்கித்தவிக்கும் இப்பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story