திசையன்விளை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
திசையன்விளை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை, முருங்கை மரங்கள் முறிந்து நாசமானது.
திசையன்விளை:
திசையன்விளை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை, முருங்கை மரங்கள் முறிந்து நாசமானது.
சூறைக்காற்றுடன் மழை
திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உவரி, நவ்வலடி, முதுமொத்தன்மொழி, மன்னார்புரம், இடையன்குடி, நாடார் அச்சம்பாடு, இடைச்சிவிளை, மகாதேவன்குளம் ஆகிய பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. மேலும் முருங்கை மரங்களும் முறிந்து சேதம் அடைந்தன.
மின்கம்பங்கள் சாய்ந்தன
ஆனைகுடி விலக்கு, முதுமொத்தன் மொழி ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நாடார் அச்சம்பாட்டில் மாமரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அங்கும் மின்தடை ஏற்பட்டது.
அந்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். திசையன்விளை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மரம் முறிந்து சாலையில் விழுந்தது. உடனே நகர பஞ்சாயத்து ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story