வாகனங்களில் காய்கறி விற்பனை


வாகனங்களில் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 26 May 2021 12:16 AM IST (Updated: 26 May 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடங்கியது.

விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் 36 வார்டுகளிலும் 12 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
காய்கறிகளின் விலையை நகராட்சி நிர்வாகம் நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று பல தெருக்களில் வாகனங்களில் காய்கறி வாங்க சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள்காய்கறி வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 
மேலும் காய்கறி விற்பனை செய்வோர் நகராட்சி நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததால் பொதுமக்களுக்கும் காய்கறி விற்பனை செய்வோருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
எனவே நகராட்சி நிர்வாகம் காய்கறி விலை பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூடுதல்விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகர மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 
மேலும் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Next Story