ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசியில் ஒரேநாளில் ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி மற்றம் அதன் சுற்றுப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சப்-கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் சிறப்புமுகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிவகாசி நகராட்சி பழைய அலுவலகத்தில் நேற்று காலை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், தொழிலாளர்கள் என மொத்தம் 700 பேர் சமூக இடைவெளியுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமை அசோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதேபோல் அனுப்பன்குளம் பஞ்சாயத்து பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி நேற்று அப்பகுதியை சேர்ந்த 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக முகாமை பஞ்சாயத்து தலைவர் கவிதா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story