நெல்லையில் வைகாசி விசாகம்: முருகன் கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு


நெல்லையில் வைகாசி விசாகம்:  முருகன் கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 26 May 2021 12:16 AM IST (Updated: 26 May 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபட்டனர்.

நெல்லை:
நெல்லையில் வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்கள் முன்பு பக்தர்கள் வழிபட்டனர்.

வைகாசி விசாகம்

வைகாசி மாதம் பவுர்ணமி தினமான வைகாசி விசாகம் அன்று தமிழ்க்கடவுள் முருகன் அவதரித்தார். இதையொட்டி ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் விழாக்கள் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே உள்ளே சென்று பூஜைகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாமல், கோபுரங்களை பார்த்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

பக்தர்கள் வழிபாடு

இந்த நிலையில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதையொட்டி கோவில்கள் முன்பு நின்று பக்தர்கள் வழிபட்டனர். சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர். 

Next Story