ரேஷன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
ரேஷன் பொருட்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கும் கடந்த 15-ந் தேதி முதல் வழங்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததால் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை.
மக்கள் கூட்டம்
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நேற்று அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது. மேலும் விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இதனால் ரேஷன் கடைகளில் நேற்று மக்கள் கூட்டமாக குவிந்தனர். நெல்லை மாநகரில் மனகாவலம்பிள்ளை நகர் கென்னடி தெருவில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் கூட்டம் அலைமோதியது. அங்கு போலீசார் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் சேர்ந்து பொது மக்களை சமூக இடைவெளியுடன் வரிசையாக நிற்க வைத்து பொருட்களை வழங்கினர்.
இதேபோல் அதிக கார்டு உள்ள ரேஷன் கடைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலும் நேற்று ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பேட்டை
இதேபோல் பேட்டையில் உள்ள ேரஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பேட்டை சுகாதார ஆய்வாளர் அந்தோணி தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள், முத்தையா மற்றும் பணியாளர்கள் அனைத்து வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story