அரியப்பபுரம் அரசு சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் கர்ப்பிணிகளுக்கு கொரோனா சிகிச்சை
அரியப்பபுரம் அரசு சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் கர்ப்பிணிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், அரியப்பபுரம் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆஸ்பத்திரி கர்ப்பிணிகளுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, அதன்படி 30 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆஸ்பத்திரியில் குழந்தை பிறப்பிற்கு முன்பும், குழந்தை பிறந்த பின்பும் யாருக்காவது நோய் தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சொக்கம்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையமும் கர்ப்பிணிகளுக்கான கொரோனா நோய் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. அங்குள்ள 30 படுக்கைகளும் நிரம்பியுள்ள நிலையில் தற்போது அரியப்பபுரம் துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story