கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 4 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
4 பேர் சாவு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9,790 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 36 வயது பெண், தலா 60 வயதுடைய 2 ஆண்கள், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 52 வயதுடைய பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
2,166 பேருக்கு சிகிச்சை
இதுவரை கொரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 7,546 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,166 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story