2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் கைதான மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே கஞ்சா வியாபாரி செங்கோட்டுவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த அறிவழகன் (வயது 35), அரணாரை வடக்கு காலனியைச் சேர்ந்த சண்முகம் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார். அதன்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டுள்ள அறிவழகன், சண்முகம் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகல் நேற்று வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story