முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி வலம் வந்த வாகன ஓட்டிகள்
ஜெயங்கொண்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் சாலைகளில் வலம் வந்தனர்.
ஜெயங்கொண்டம்:
வாகனங்களில் சென்றனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவம் மற்றும் இறப்பு உள்ளிட்ட போன்றவற்றுக்கு மட்டுமே இ-பதிவு பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புற பகுதிகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
ஜெயங்கொண்டம் நகரில் ஊரடங்கையொட்டி பல்வேறு சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு பணிகளுக்காக இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பலர் சென்றனர். அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அபராதமும் விதிக்கின்றனர்.
கொரோனா பரிசோதனை
இருப்பினும் வாகன ஓட்டிகள் சாலைகளில் வலம் வருவது குறையவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்த பொதுமக்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, கொரோனா பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story