ஊரடங்கை மீறிய 164 பேர் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கை மீறிய 164 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
கரூர்
கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வாகனத்தில் சுற்றித் திரியும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வெளியே வந்த 104 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.20 ஆயிரத்து 800-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 21 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.10,500-ம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 32 பேர் உள்பட 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் 57 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 30 லிட்டர் கல்லும், 5 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டு 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
.

Related Tags :
Next Story