உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த இந்து தொழிலாளியின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பினர்- நம்பியூரில் மதத்தை தாண்டி மலர்ந்த மனித நேயம்
நம்பியூரில் மதத்தை தாண்டி மனிதநேயத்துடன், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த இந்து தொழிலாளியின் உடலை முஸ்லிம் அமைப்பினர் பெற்று அடக்கம் செய்தனர்.
நம்பியூர்
நம்பியூரில் மதத்தை தாண்டி மனிதநேயத்துடன், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த இந்து தொழிலாளியின் உடலை முஸ்லிம் அமைப்பினர் பெற்று அடக்கம் செய்தனர்.
தொழிலாளி
நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 42). தொழிலாளி. கடந்த சில நாட்களாக செல்வராஜூக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்தநிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று காலை செல்வராஜ் திடீரென இறந்துவிட்டார். காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டு செல்வராஜ் இறந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்று உறவினர் அஞ்சினார்கள். மேலும் அவருடைய உடலை அடக்கம் செய்யவும் யாரும் முன்வரவில்ைல என்று கூறப்படுகிறது.
முஸ்லிம் அமைப்பினர்
இதுபற்றி நம்பியூரில் உள்ள ஒரு முஸ்லிம் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த அமைப்பை சேர்ந்த சகீம், நசூர், முகமது, இசாக் என்ற 4 பேர் முழு கவச உடை அணிந்து அங்கு சென்றார்கள்.
பின்னர் உறவினர்களிடம் முறைப்படி நாங்கள் உடலை அடக்கம் செய்கிறோம் என்று பெற்றுக்கொண்டார்கள். பிறகு அந்த பகுதியில் உள்ள மயானத்துக்கு உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தார்கள்.
மனித நேயம்
அடக்கம் செய்வதற்கு முன்னதாக செல்வராஜின் உடலில் இருந்து மருத்துவ அதிகாரிகள் கொரோனா பரிசோதனை எடுத்து சென்றுள்ளார்கள்.
கொரோனா சோதனை முடிவு வருவதற்குள்ளேயே உறவினர்கள் செல்வராஜின் உடல் அருகே செல்ல அச்சப்பட்டாலும், மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் உடலை பெற்று அடக்க செய்தது நம்பியூரில் மதத்தை தாண்டி மனித நேயத்தை மலரச்செய்துள்ளது.
Related Tags :
Next Story