கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது; ரூ.49 ஆயிரம் கருகியது- கணவன், மனைவி உயிர் தப்பினர்


கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது; ரூ.49 ஆயிரம் கருகியது- கணவன், மனைவி உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 26 May 2021 3:05 AM IST (Updated: 26 May 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரொக்கப்பணம் ரூ.49 ஆயிரம் கருகியது. கணவன்-மனைவி உயிர் தப்பினார்கள்.

கடத்தூர்
கோபி அருகே வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரொக்கப்பணம் ரூ.49 ஆயிரம் கருகியது. கணவன்-மனைவி உயிர் தப்பினார்கள். 
தீப்பிடித்தது
கோபி அருகே உள்ள சன்னகுளியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவருடைய மனைவி ரங்கம்மாள் (45). கூலிதொழிலாளர்கள். இருவரும் நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள். அப்போது குடிசையின் மேற்புறத்தில் திடீரென தீப்பற்றியது. உடனே இருவரும் வீட்டை விட்டு வௌியே ஓடிவந்து உயிர் தப்பினார்கள். அதற்குள் தீ மளமளவென குடிசை முழுவதும் பரவிவிட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தார்கள். ஆனால் அணைக்க முடியவில்லை. இதற்கிடைய வீட்டுக்குள் இருந்த கியாஸ் சிலிண்டர் டமார் என்று வெடித்தது. 
பணம் கருகியது
 இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் உடனே கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தார்கள். எனினும் வீட்டின் பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.49 ஆயிரம், பாத்திரங்கள், துணிகள், மளிகை பொருட்கள் அணைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. 
தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story