தாளவாடி, அந்தியூர், கொடுமுடி பகுதியில் 179 பேருக்கு கொரோனா


தாளவாடி, அந்தியூர், கொடுமுடி பகுதியில் 179 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 May 2021 3:06 AM IST (Updated: 26 May 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி, அந்தியூர், கொடுமுடி பகுதியில் 179 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு
தாளவாடி, அந்தியூர், கொடுமுடி பகுதியில் 179 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 
தாளவாடி
 தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தாளவாடியில் உள்ள கொரோனா மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தாளவாடி அருகே உள்ள கோட்டமாளம் கிராமத்தில் ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. அனைவரும் தாளவாடியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு பஸ்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். தற்போது கோட்டமாளம் கிராமம் முழுவதும் தனிமை படுத்தப்பட்டுள்ளது.
அந்தியூர்
அந்தியூர்அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 18 வயது ஆண், அத்தாணி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 27 வயது ஆண், 42 வயது பெண், வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், 9 வயது சிறுமி, 16 வயது சிறுவன், அத்தாணி காலனி பகுதியை சேர்ந்த 48 வயது பெண், கீழ்வானி பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண், குப்பாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்த 32, 65 வயது ஆண்கள், 62 வயது பெண் உள்பட அந்தியூர் பகுதியில் மொத்தம் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் அனைவரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். 
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் 31, 36, 29, 27, 35 வயதுடைய ஆண்களுக்கும், 51, 10, 28, 55, 37, 12 வயதுடைய பெண்களுக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த 67 வயது ஆணுக்கும், 48 வயது பெண்ணுக்கும், வடக்குப்புதுப்பாளையத்தை சேர்ந்த 53, 41, 43 வயது ஆண்களுக்கும், 55 வயது பெண்ணுக்கும், அஞ்சூரைச் சேர்ந்த 33, 26 வயதுடைய ஆண்களுக்கும், 19, 58 வயதுடைய பெண்களுக்கும், ஒத்தக்கடை சேர்ந்த 56, 58 வயதுடைய ஆண்களுக்கும், சாலைப்புதூரை சேர்ந்த 25, 49, 51 வயதுடைய ஆண்களுக்கும் சோளக்காளிபாளையத்தை சேர்ந்த 28, 67 வயதுடைய ஆண்களுக்கும், 6 வயது சிறுவனுக்கும், 32, 54 வயதுடைய பெண்களுக்கும், இச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 48, 49 வயதுடைய ஆண்களுக்கும், 46 வயதுடைய பெண்ணுக்கும், தெற்குபுதுப்பாளையத்தைச் சேர்ந்த 68 வயது பெண்ணுக்கும் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதித்தவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 
தாளவாடி, அந்தியூர், கொடுமுடி பகுதியில் 179 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story