மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதியில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை


மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதியில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை
x

வாகனங்களில் காய்கறிகள் விற்பனை

இளம்பிள்ளை:
மகுடஞ்சாவடி வட்டாரத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் சார்பில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. பின்னர் அவற்றை வைகுந்தம் புதூர், கண்ணந்தேரி, ஏகாபுரம், கனககிரி, இடங்கணசாலை பேரூராட்சி உள்பட மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் 10 வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டன. இந்த விற்பனையை  மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குனர் மணிமேகலாதேவி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிராம மக்களுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

Next Story