பூலாம்பட்டி கதவணையில் தண்ணீர் தேக்கம்
பூலாம்பட்டி கதவணையில் தண்ணீர் தேக்கம்
இளம்பிள்ளை:
எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் தேக்கி வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கதவணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக மே மாதத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் திறந்து விடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல கடந்த 4-ந் தேதி பூலாம்பட்டி கதவணை பராமரிப்பு பணிக்காக காவிரி ஆற்றில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் கதவணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. பாறை திட்டுகளாக காட்சியளித்த பூலாம்பட்டி கதவணை பகுதி தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Related Tags :
Next Story