முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக சேலத்தில் 215 பேர் மீது வழக்கு 182 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சேலத்தில் 215 பேர் மீது வழக்கு
சேலம்:
முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக சேலத்தில் 215 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 182 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
வாகன சோதனை
இதையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று 2-வது நாளாக தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அதே போன்று சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் போலீசாருடன் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து வாகன சோதனை நடத்தினர். முழு ஊரடங்கு உத்தரவை மீறி முதல் நாளான நேற்று முன்தினம் மாநகரில் வாகனத்தில் சுற்றித்திரிந்த 182 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோன்று முககவசம் அணியாமல் வந்த 215 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
எச்சரிக்கை
இதே போல ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story