மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து ரேஷன் பொருட்களை வாங்கிச்சென்ற பொதுமக்கள்
கடந்த 24-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை பிறப்பித்திருந்தார்.
திருவள்ளூர்,
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை பிறப்பித்திருந்தார். ஊரடங்கில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இருக்க நேற்று முதல் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் எனவும் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை திறக்கப்பட்டது. அப்போது மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) பில்லா என்கிற சதீஷ்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் சுகுமார் ஆகியோர் பொதுமக்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி செல்ல ஏதுவாக ஆங்காங்கே வட்டங்களை அமைத்து ஏற்பாடு செய்து இருந்தனர். ரேஷன் பொருட்களை வாங்க வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடித்து வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story