ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 26 May 2021 9:12 AM IST (Updated: 26 May 2021 9:12 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் கிராமம் ராமச்சந்திரா தெருவை சேர்ந்தவர் தனவள்ளி (வயது 65). இவர் அருகே உள்ள பால் ரெட்டி கண்டிகை கிராமத்தில் நடந்து வரும் தேசிய ஊரக வேலை திட்ட பணியில் பங்கேற்க தனது பேரன் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தனவள்ளி தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story