திருவள்ளூர் ஒன்றியத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை


திருவள்ளூர் ஒன்றியத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை
x
தினத்தந்தி 26 May 2021 9:38 AM IST (Updated: 26 May 2021 9:38 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் ஒன்றியத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.

திருவள்ளூர், 

கொரானா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்திருந்தார். அப்போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்றவற்றை வீடுவீடாக சென்று விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

முதல்-அமைச்சரின் ஆணைக் கிணங்க நேற்று திருவள்ளூரை அடுத்த ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காக்களூர் ஜெயசீலன், மாவட்ட கவுன்சிலர் தென்னவன, ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், சரத்பாபு, மாவட்ட பிரதிநிதி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று காய்கறி, பழங்கள் வழங்க செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் அடங்கிய பை தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ஸ்ரீ சங்கரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story