தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை: மு.க. ஸ்டாலின்


தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை: மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 May 2021 11:18 AM IST (Updated: 26 May 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-  தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் பெரிய பிரச்சினை இருக்காது. 

உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளோம். இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வாங்கப்படும். கொரோனா தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தேவைப்பட்டால் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.  தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2.84- லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் தடுப்பூசி வீணாகுவது ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.  அனைவரும் தடுப்பூசி போட முன் வர வேண்டும்.  ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் தடுப்பூசி மையங்களில் ஆய்வு செய்தேன். கொரோனா தொற்றை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது” என்றார். 


Next Story