செம்பனார்கோவிலில் நடமாடும் காய்கறி வாகனம் - நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
செம்பனார்கோவிலில் நடமாடும் காய்கறி வாகனத்தை நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பொறையாறு,
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொன்னி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் குமரன் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து 7 நடமாடும் காய்கறி வாகனத்தை பூம்புகார் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைகண்ணன், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர்கள் விசுவநாதன், கருணாநிதி, சந்திரமோகன், ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story