மணல்மேடு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு - தீயணைப்பு நிலையம் சார்பில் நடந்தது
மணல்மேடு பகுதிகளில் தீயணைப்பு நிலையம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
மணல்மேடு,
மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தீயணைப்புத் துறையினர், துப்புரவு தொழிலாளர்கள், உள்ளாட்சித் துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தீவிரமாக இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தோற்று பரவலைத் தடுக்க மணல்மேடு பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் மணல்மேடு தீயணைப்பு மீட்பு நிலையத்தினர் இணைந்து மணல்மேடு கடைவீதி, ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் மணல்மேடு தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் சகாயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story