சீர்காழியில், கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - துணை போலீஸ் சூப்பிரண்டு யுவப்பிரியா பார்வையிட்டார்
சீர்காழியில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு யுவப்பிரியா பார்வையிட்டார்.
சீர்காழி,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரண்டாவது ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இருந்தபோதும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாளுக்கு நாள் சீர்காழி பகுதியில் வைரஸ் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் சாலையில் தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர்.
இந்த ஓவியங்களை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவப்பிரியா, சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்த தமிழ்நாடு ஓவிய சங்கத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story