மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 May 2021 7:53 PM IST (Updated: 26 May 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி:

மத்திய அரசு கொண்டுவந்த புதிய 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

 இதேபோல் அல்லிநகரம், கம்பம், போடி, ஆண்டிப்பட்டி உள்பட மாவட்டங்களில் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பொது இடங்களிலும், தங்களின் வீடுகள் முன்பும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பழைய பூ மார்க்கெட் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு தேனி நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story