எண்ணிக்கை அதிகரிப்பு
திருப்பூரில் கோரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பூர்
திருப்பூரில் கோரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா
திருப்பூர் மாநகரில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட போலீசாருக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் வீரபாண்டி அனைத்து மகளிர் போலீஸ் ஆலயத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு போலீஸ் நிலையங்கள் மாற்றப்பட்டு அங்கு போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
இதுபோல் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள தனியார் பள்ளியில் போலீஸ் நிலையம் மாற்றப்பட்டு அங்கு பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
முழு முககவசம்
இடநெருக்கடி உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசார் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இருசக்கர வாகனங்களில் மருத்துவ தேவைக்கு அதிகம் சென்று வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர் கூட மருத்துவமனைக்கு செல்லும்போது இரு சக்கர வாகனத்தில், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் நிலை உள்ளது.
போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்து அனுப்புகிறார்கள். முக கவசம் அணிந்து இருந்தாலும்கூட இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வரும்போது அதன் மூலமாக தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் போலீசாருக்கு முகத்தை முழுவதுமாக மூடிக் கொள்ளும் வகையில் முழு முககவசம் பேஸ்ஷீல்டு உள்ளிட்ட தடுப்பு உபகரணங்களை வழங்கினால் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். அதுபோல் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு முழு உடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்கள் வழங்க வேண்டும். உயர் அதிகாரிகள் இது குறித்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
Related Tags :
Next Story