கொரோனா நோயாளிகளுக்கு 2½ டன் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி - பொதுமக்கள் பாராட்டு


கொரோனா நோயாளிகளுக்கு 2½ டன் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி - பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 26 May 2021 8:55 PM IST (Updated: 26 May 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு 2½ டன் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது விவசாய நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை இலவசமாக கொடுக்க மதியழகன் முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கலைச்செல்வனை அணுகி கொரோனா நோயாளிகளுக்கு தான் வாழைப்பழங்களை கொடுக்க விரும்புவதாக கூறினார். அதைக்கேட்ட அவர் இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறை உதவி இயக்குர் நமச்சிவாயத்திடம் தகவல் தெரிவித்தார். அவரது அனுமதியின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க 2½ டன் வாழை பழத்தை வாகனம் மூலம் ஏற்றி மதியழகன் அனுப்பி வைத்தார்.

மேலும் பழங்கள் அழுகாமல் இருக்க பதப்படுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு எவ்வளவு வாழைப்பழம் தேவைப்படுகிறதோ அதை தன்னால் முடிந்தவரை அனுப்பி வைக்கிறேன் என்று மதியழகன் கூறினார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்திலும் இவர் தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை இலவசமாக மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story