மேலும் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம்


மேலும் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 26 May 2021 9:31 PM IST (Updated: 26 May 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் மேலும் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்: 

கொடைக்கானலில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து கூடுதலாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. 

அதன்படி கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் உள்ள நகராட்சி தங்கும் விடுதியில் உள்ள 17 அறைகளும், நாயுடுபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள 33 அறைகளும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டது. 

இந்த மையங்கள் திறப்பு நிகழ்ச்சி நகராட்சி தங்கும் விடுதியில் நடந்தது. இதற்கு அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பொன்ரதி தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் முன்னிலை வகித்தார்.

 நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் நாராயணன் கலந்து கொண்டு 50 அறைகளுக்கான சாவிகளை தலைமை மருத்துவரிடம் வழங்கி பேசினார்.

 அப்போது அவர் கூறுகையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சத்யசாய் டிரஸ்ட் சார்பில் இரண்டு வேளை உணவு வழங்கப்படும். 24 மணி நேரமும் தூய்மைப் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்றார்.

 அதேபோல பாதுகாப்பு பணிக்கு போலீஸ்காரர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன், டாக்டர் ஸ்ரீதர், நகர தி.மு.க. செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான முகமது இப்ராகிம், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துைண அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் நல அலுவலர் (பொறுப்பு) சுப்பையா நன்றி கூறினார். 


Next Story