நத்தாமூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
ஊரடங்கு உத்தரவை மீறி நத்தாமூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர்திருவிழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மட்டும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெளியூர் ஆட்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் தேர் திருவிழாவை யாரும் செல்போன்கள் அல்லது கேமராக்களில் படம் மற்றும் வீடியோ எடுக்க கிராம முக்கியஸ்தர்கள் தடைவிதித்தாக கூறப்படுகிறது. இருப்பினும் தேர்திருவிழா தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைத்தலங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
முக கவசம்
இதில் விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. முழு ஊரடங்கு அமலில் இருந்தும் அதனை மீறி நடத்தப்பட்ட தேர்திருவிழாவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story