மயிலம், தைலாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


மயிலம், தைலாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 26 May 2021 10:13 PM IST (Updated: 26 May 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

மயிலம், தைலாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மயிலம், 

மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது இதில் சிவக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழியிடம் மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல் ரெட்டணை, நெடிமோழியனூர், கீழ்மாம்பட்டு, திருவம்பட்டு மருத்துவமனையிலும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் நெடி சுப்பிரமணி, மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி நிர்வாகி பழனியப்பன், மாநில துணைத்தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் துரைராஜ், கலியன், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வானூர் அருகே தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் சக்கரபாணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் ஜெயபிரகாஷ், மருத்துவர் பாலசுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் ரவி, சமுதாய செவிலியர் பேபி, மருந்தாளுனர் முருகையன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story