கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே வடதொரசலூர் கிராமத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். இதில் பெரியசாமி, தங்கராசு, ராஜேஷ், பாலு, செல்வம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பல்வேறு கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சிராயப்பாளையம்
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கச்சிராயப்பாளையம், எடுத்தவாய்நத்தம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story