வீட்டிற்குள் புகுந்த பாம்பு


வீட்டிற்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 26 May 2021 10:31 PM IST (Updated: 26 May 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

நொய்யல்
தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 67). இவரது வீட்டிற்குள் நேற்று நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைக்கண்ட செல்லம்மாள் அக்கம், பக்கத்தினரை அழைத்து பாம்பை விரட்டினார். ஆனால் பாம்பு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story