கரூர் மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு கொரோனா தொற்று


கரூர் மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 May 2021 10:31 PM IST (Updated: 26 May 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் இறந்துள்ளனர்.

கரூர்
359 பேருக்கு தொற்று
ஆரம்ப கால கட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி நேற்று மாவட்டத்தில் புதிதாக 359 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 பேர் பலி
இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 252 பேர் குணமடைந்ததால் அவர்கள் `டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 2,666 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story