263 பேருக்கு கொரோனா
263 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 263 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 15 ஆயிரத்து 320 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 297 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 81 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 199 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 65, 57, 67 மற்றும் 44 வயது ஆண்கள் மற்றும் 68 வயது பெண் என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story