கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 370 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 370 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.
புதுக்கோட்டை, மே.27-
தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 355 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதே நேரத்தில் சிகிச்சையில் 370 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் கொரோனா சிகிச்சைக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து271 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 40 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 193 ஆக உள்ளது.
திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட 5 பேருக்கு ெதாற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வீடுகள் தோறும் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story