கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
தோகைமலை
கொரோனா தொற்று தற்போது அதிகமாக பரவிவருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தோகைமலை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் சார்பாக 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மேற்கண்ட வயதுடைய அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வெளியில் வரும்போது முககவசம் அணிய வேண்டும் என தோகைமலை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தியாகராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story